மலையாள இயக்குனரின் தமிழ் பற்று!

மலையாள இயக்குனரின் தமிழ் பற்று!

செய்திகள் 18-Dec-2013 3:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சாய் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷிஹாஜுதீன் தயாரிக்கும் படம் ’அருத்தாப்பத்தி’. இது என்ன மலையாள படமா என்று கேட்கிறீர்களா? அதுதான் இல்லை! இது ஒரு நேரடி தமிழ் படம்! ‘அருத்தாப்பத்தி’ என்ற தமிழ் வார்த்தை அதிகம் பேருக்கு பரிச்சயமிருக்காது! ‘அருத்தாப்பத்தி’ என்றால் நாம் சொல்கிற வார்த்தைகளில் இருந்து நாம் சொல்லாத விஷயங்களையும் புரிந்துகொளவது என்பது தான் இதன் அர்த்தமாம்! இந்த சுத்தமான தமிழ் பெயரோடு இந்தப் படத்தை இயக்குபவர் கேரளாவை சேர்ந்த சஜின் வர்கீஸ்! இவர் பிரபல மலையாள இயக்குனர் வினயனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர், ‘அருத்தாப்பத்தி’ படத்தில் மாறுபட்ட ஒரு கதைய பதிவு செய்கிறாராம்! இந்தப் படத்தில் கதையின் நாயகனாக ‘மைனா’ படத்தில் நடித்த விதார்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக கொல்கத்தா அழகி ஐஸ்வர்யா தத் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ரமையா, மனோபாலா, ஆதிரா ஆகியோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. இந்தப் படத்திற்கு நவாஸ் ஒளிப்பதிவு செய்ய, ‘லஜ்ஜாவதி’ பாடல் புகழ் ஜாசி கிஃப்ட் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;