8 வயதில் எழுதிய கதை! - பாலுமகேந்திரா

8 வயதில் எழுதிய கதை! - பாலுமகேந்திரா

செய்திகள் 18-Dec-2013 11:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சசிகுமாரின், ‘கம்பெனி புரொடக்‌ஷன்’ தயாரித்து வருகிற 20-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் படம் ‘தலைமுறைகள்’. சஷிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் கார்த்திக் ஆகியோருடன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் இயக்குனர் சசிகுமார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங் செய்து இயக்கி, இதில் முதல் முறையாக முக்கியமான ஒரு வேடத்திலும் நடித்திருக்கிறார் பாலுமகேந்திரா. படம் குறித்து பாலுமகேந்திரா கூறும்போது,

‘‘இந்தக் கதையை நான் 8 வயதில் எழுதத் தொடங்கினேன். என் தாத்தாவின் விரல்களை பிடித்துக்கொண்டு எங்கள் கிராமத்தை வலம் வந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்தப் படம் உருவாக காரணம் சசிகுமார். சசிகுமார் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை. அதற்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் வரும் வீடு சுமார் 250 ஆண்டுகள் பழமையானது. அந்த வீட்டை பார்த்தவுடன் அந்த வீடு எனக்காகவே காத்திருந்த மாதிரி இருந்தது. வீட்டினுள் கால் எடுத்து வைத்தவுடனே எனக்கு சிலிர்ப்பு! எனக்கு ஏற்ற மாதிரியான லைட்டிங் வசதி பிரபஞ்ச சக்தியின் உதவியால் கிடைத்தது. படத்திற்காக செயற்கையாக லைட்டிங் செய்யப்படவில்லை. அங்கே கிடைத்த இயற்கை வெளிச்சத்திலேயே படம் பிடித்துள்ளேன். தாத்தா – பேரன் இடையிலான உறவு பலருக்கு அவர்களின் ஞாபகங்களை அசை போடவைக்கும்’’ என்றார் உணர்ச்சிவசப்பட்டவாறு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;