ஆஸ்கருக்குச் செல்லும் ‘காமசூத்ரா 3டி’

ஆஸ்கருக்குச் செல்லும் ‘காமசூத்ரா 3டி’

செய்திகள் 18-Dec-2013 11:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரூபேஷ் பால் இயக்கியிருக்கும் படம் ’காமசூத்ரா 3டி’. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் ஐந்து பாடல்கள் உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன! இயக்குனர் ரூபேஷ் பால் மற்றும் பிரத்தியூஷ் பிரகாஷ் எழுதியுள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு சென்னையைச் சேர்ந்த சச்சின் – ஸ்ரீஜித் ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள். வருகிற ஜனவரி 16-ஆம் தேதி இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் சலீம் குமாரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;