‘தல’ - ‘தளபதி’யின் இசை விழா ரகசியம்!

 ‘தல’ - ‘தளபதி’யின் இசை விழா ரகசியம்!

செய்திகள் 18-Dec-2013 11:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பொங்கலுக்கு விஜய் நடித்திருக்கும், ‘ஜில்லா’, அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்க, இந்த இரண்டு படங்களின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. பொதுவாக விஜய் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெறுவது வழக்கம். ஆனால் ‘ஜில்லா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வருகிற 21-ஆம் தேதி மிக எளிமைமையாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். அதுமாதிரி அஜித் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா பெரும்பாலும் பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் நடைபெறுவது வழக்கம்! அது மட்டுமல்லாமல் அஜித் நடிக்கும் படம் என்றாலும் அந்த படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ள அஜித் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதனாலேயே அவர் நடிக்கும் படங்களின் விழாக்களை அமைதியாக, அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாக நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ‘வீரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வருகிற 20-ஆம் எளிமையாக நடைபெறவிருக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழாக்கள் எளிமையாக நடக்கட்டும், ஆனா இந்த இரு படங்களின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாச்சே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்


;