சூரியா கொடுத்த தைரியத்தில் நடித்தேன்!

சூரியா கொடுத்த தைரியத்தில் நடித்தேன்!

செய்திகள் 18-Dec-2013 10:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆமீர்கான், கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள ‘தூம் 3’ திரைப்படம் இந்த மாதம் 20-ஆம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தின் புரொமோஷன் வேலைகளுக்காக இந்தியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயனம் செய்யும் படக்குழு, சென்னைக்கு நேற்று மாலை வந்தது. ஆமீர்கான், கத்ரீனா கைஃப், உதய்சோப்ரா, அபிஷேக் பச்சன் மற்றும் ‘தூம் 3’ படத்தின் இயக்குனர் விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திததனர். அப்போது ஆமீர்கான் பேசும்போது,

‘‘ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் நான். ‘ஆதாங் கி ஆதாங்’ படத்தில் அவருடன் நடித்தேன். மிகவும் எளிமையான மனிதர். முதலில் அவருடன் நடிக்க தயக்கமாக இருந்தது. பின்னர் அவர் கொடுத்த தைரியத்தில் நடித்தேன். எனக்கு தமிழ் தெரியாது. ஹிந்தி ‘கஜினி’படத்தில் நடிக்க முதலில் தயக்கம் இருந்தது. இது பற்றி தமிழில் நடித்த சூரியாவிடம் கேட்டேன். அவர் கொடுத்த தைரியத்தின் பேரில் நடித்தேன். சென்னையில் இருந்து பாலிவுட்டிற்கு வந்து நிறைய கலைஞர்கள் சாதிகின்றனர். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.முருகதஸ், ரவி.கே.சந்திரன் உட்பட பலர் சாதித்து வருகின்றனர். ‘தூம் 3’ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;