தலைப்பு மாறிய ரகசியம்!

தலைப்பு மாறிய ரகசியம்!

செய்திகள் 17-Dec-2013 1:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’பாலிவுட் ஸ்டார்’ சல்மான் கான் நடிக்கும் ஹிந்திப் படம் ‘ஜெய்ஹோ’. இந்தப் படத்திற்கு முதலில் ’மென்டல்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். இந்தப் பெயர் மாற்றத்திற்கான காரணம் குறித்து மும்பையில் நடந்த ஒரு விழாவில் சல்மான் கான் கூறும்போது, ‘‘பாலிவுட்டில் இன்டலிஜென்ட் கான், பாட்ஷா கான், சயிஃப் அலிகான் என நிறைய ‘கான்’கள் இருக்கிறார்கள். ‘மெண்டல்’ என்ற படத் தலைப்போடு நான் இந்தப் படத்தில் நடித்தால் என்னை யாரவாது ’மென்டல்கான்’ என்று கூப்பிட வாய்ப்பு இருக்கிறது. (சிரித்தபடி…) அப்படிக் கூப்பிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் என் தந்தைக்கு ‘மென்டல்’ என்ற படத் தலைப்பு பிடிக்கவே இல்லை! ‘என்னடா படத்துக்கு இது மாதிரியெல்லாம் தலைப்பை வச்சிருக்கே? அதை மாற்று’’ன்னு சொன்னார். அவர் சொன்னதுக்காகதான் ‘மென்டல்’ என்ற தலைப்பை மாற்றி ‘ஜெய்ஹோ’ என்று வைத்தேன்’’ என்று கூறியிருக்கிறார். இந்தப் படத்தை சல்மான்கானின் சகோதரர் சொஹைல் கான் இயக்க, டெய்சிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;