கவுண்டமணியின் ஃபுல் மீல்ஸ்!

கவுண்டமணியின் ஃபுல் மீல்ஸ்!

செய்திகள் 17-Dec-2013 11:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னையில் நேற்று பெய்யத் துவங்கிய மழை துளி ஒன்று விரைவில் பெரு மழையாக உருவெடுக்க உள்ளது . இந்த பெருமழை சிரிப்பு மழை! ‘சீரோ ரூல்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் டாக்டர். சிவபாலன் தயாரிக்க, இயக்குனர் கௌதம் வாசு தேவ மேனனிடம் இணை இயக்குனராக இருந்த ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘ 49ஒ’ படப்பிடிப்பில்தான் சிரிப்பு மழை பெய்தது . இந்தப் படத்தில் கதையின் நாயகனாக கவுண்ட மணி நடிக்கிறார் என்றால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்குமா என்ன?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் கவுண்டமணி, இந்தப் படத்தை தேர்ந்தெடுக்க காரணம், ‘49ஒ’ என்ற பரப்பான தலைப்பு மட்டுமின்றி, வித்தியாசமான கதை பின்னணியுமே காரணம். இந்தப் படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக நடிக்க அவருடன் மயில் சாமி, எம்.எஸ்.பாஸ்கர், திருமுருகன் , சோமசுந்தரம் அகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கே. இசை அமைக்க, பாடல்களை யுகபாரதி இயற்றுகிறார். பாபு ஒளிபதிவு செய்ய, மாய கண்ணனின் கலை வண்ணத்தில், படத்தொகுப்பை பரமேஷ் கிருஷ்ணா செய்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கவுண்டமணி நடிக்கும் இப்படம் ரசிகர்களுக்கு ‘ஃபுல் மீல்ஸ்’ மாதிரி அமையும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஆரோக்கியதாஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - டிரைலர்


;