கம்யூனிசம் வலியுறுத்தும் புறம்போக்கு!

கம்யூனிசம் வலியுறுத்தும் புறம்போக்கு!

செய்திகள் 17-Dec-2013 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் 'புறம்போக்கு' திரைப்படத்தின் பிரத்தியேக விளம்பரங்களுக்கான புகைப் படங்கள் வெளி வந்த நாள் முதல் படத்தின் மேல் உள்ள ஆர்வம் கூடி கொண்டே வருகிறது . இப்படத்தின் முதல் காட்சி படமாக்கப் படுவதற்கு முன்னரே ஏற்பட்டுள்ள இந்த எதிர்பார்ப்பு இயக்குனர் ஜனநாதனின் வித்தியாசமான கதை சொல்லும் பாணிக்கும், இதுவரை கண்டிராத ஆர்யா-விஜய் சேதுபதி கூட்டணிக்கும் கிடைத்துள்ள வரவேற்பு என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த புகைப் படங்களில் மிகவும் முக்கியமானது ஆர்யா, விஜய் சேதுபதி உடுத்தியுள்ள சட்டையின் நிறம்தான் ! ஆர்யா உடுத்தியுள்ள சிவப்பு நிற சட்டையும் , விஜய் சேதுபதி அணிந்துள்ள கருப்பு நிற சட்டையும் படத்தின் ' நிறத்தை வெளிக் காட்டுகிறது. ஆர்யாவின் சிவப்பு நிற சட்டையும் , அவரின் இடது கை பழக்கமும் என்னவோ சொல்ல வருகிறது. இந்தப் படத்தின் கதை கம்யூனிச சிந்தனையை தூண்டும் விதமாக அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஜனநாதன் படங்களில் பொதுவாக காணப்படும் வித்தியாசமான கதை அமைப்பும், காட்சி அமைப்பும் இந்தப் படத்திலும் இருக்கும் என்று நம்புவோம். இந்தப் படத்தில் கார்த்திகா நாயர் கதாநாயகியாக நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;