திரைப்படத்துறையின் முதுகெலும்பு சிறிய படங்கள்தான்!

 திரைப்படத்துறையின் முதுகெலும்பு சிறிய படங்கள்தான்!

செய்திகள் 17-Dec-2013 10:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

H 3 Cinemas தயாரிக்கும் படம் 'சாய்ந்தாடு சாய்ந்தாடு'. கதாநாயகன் ஆதர்ஷ், கதாநாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் கஸாலி. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் சமுத்திரக்கனி, அருணாச்சலம் ஸ்டுடியோ எம் ஜெயக்குமார், நடிகர்கள் சுப்பு பஞ்சு, செளந்தரராஜா, அஜய் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது கேயார் பேசும்போது,‘'சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தினை ஒரு சமூக உணர்வோடு மருத்துவத்துறையில் நடைபெறும் ஒரு அவலத்தைச் சுட்டிக்காட்டி இயக்கியிருக்கிறார் இயக்குனர் கஸாலி. படம் வெற்றிபெற வாழ்த்துகள்'’ என்றார்.

இயக்குனர் சமுத்திரக்கனி பேசும்போது, “ ஒரு பத்திரிக்கையாளராகத்தான் எனக்கு கஸாலியைத் தெரியும. திடீரென்று ஒரு படம் இயக்கப்போகிறேன் என்றார். அவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. அதனால் எனது படத்தில் பணியாற்று, அப்புறம் படம் இயக்கலாம் என்று சொன்னேன். அதற்குப் பிறகு ஆளையே காணோம்!. இதோ நான் எந்தப் படத்தில் அவரைப் பணியாற்ற அழைத்தேனோ அந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்த 10 நாட்களில் அவரும் அவருடைய படத்தினை முடித்து விட்டுப் பாடல்கள் வெளியிட்டிருக்கிறார் என்றால் அவரது அசாத்தியமான தன்னம்பிக்கையைப் பாராட்டியே ஆகவேண்டும்” என்றார்.

இயக்குனர் - நடிகர் பாண்டியராஜன் பேசும் போது, “பொதுவாக சாதனையாளர்களை வீட்டில் உள்ளவர்கள் அங்கீகரிப்பதில்லை. அந்த நிலையில் தனது தம்பியின் திறமையை அறிந்து தானே படத்தினைத் தயாரிக்க முன் வந்திருக்கிறார் என்றால் உண்மையில் தயாரிப்பாளர் எம். ஜெகபர் போற்றுதலுக்குரியவர்” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் நடிகர் சுப்பு பஞ்சுவும், “சிறிய படங்கள் தான் திரைப்படத்துறையின் முதுகெலும்புகள்… அவைகள் தான் திரைப்பட உலகை வாழவைக்கின்றன” என்று பேசினார்கள்.

முன்னதாக ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தில் இடம்பெற்ற ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு...’ பாடலும் டிரைலரும் திரையிடப்பட்டன!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாம் - TRAILER


;