கார்த்திகா யாருக்கு ஜோடி?

கார்த்திகா யாருக்கு ஜோடி?

செய்திகள் 16-Dec-2013 4:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் ‘புறம்போக்கு’ இந்தப் படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி என இரண்டு ஹீரோக்கள் நடிக்க, படத்தில் ஒரு கதாநாயகி கேரக்டர் மட்டும் தான்! அந்த கதாநாயகியாக நடிக்க கார்த்திகா நாயர் தேர்வாகியிருக்கிறார்! பாரதிராஜா இயக்கிய ‘அன்னக்கொடி’ படத்தில் நடித்த கார்த்திகா, அதற்கடுத்து நடித்திருக்கும் படம் ‘டீல்’. இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் கார்த்திகா, ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் நடிக்க இருக்கிறார். ஆனால் இதில் கார்த்திகா யாருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்! இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;