அரசியலில் கவுண்டமணி?

அரசியலில் கவுண்டமணி?

செய்திகள் 16-Dec-2013 2:35 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் என்ட்ரி ஆகிறார் கவுண்டமணி! ஆனால காமெடி நடிகராக மட்டும் இல்லை, கதையின் நாயகனாக! படத்தின் பெயர் ‘49 ஒ’. இந்தப் படம் குறித்த செய்தியை நாம் ஒரு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நிவைவிருக்கலாம். ‘49 ஒ’ படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னயில் துவங்கியது

.‘49 ஒ’ என்பது தேர்தலின்போது ஓட்டு போட விரும்பாதவர்கள் தங்களது கருத்தை தெரிவிப்பதற்கு அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒரு ஏற்பாடுதான்! இதன் பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் கவுண்டமணி கதையின் நாயகனாக ஒரு விவசாயியின் பாத்திரத்தில் நடிக்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து நகைச்சுவை காட்சிகளுடன் எடுக்கப்படுகிற இந்தப் படத்தை பி. ஆரோக்கியதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தை டாக்டர் எல். சிவபாலன் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - டிரைலர்


;