பிரம்மாண்டமாக வளர்ந்து இருக்கிறது தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக வளர்ந்து இருக்கிறது தமிழ் சினிமா

செய்திகள் 16-Dec-2013 2:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ட்ரிப்பிள் வி ரெக்கார்ட்ஸ்' சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் படம் 'என்னமோ நடக்குது. விஜய்வசந்த், மஹிமா, பிரபு, சரண்யா, ரகுமான் நடிக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் ராஜபாண்டி. இசையமைத்திருப்பவர் பிரேம்ஜிஅமரன். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று காலை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. ஆடியோவை இயக்குனர் பாரதிராஜா வெளியிட, பாலுமகேந்திரா பெற்றுகொண்டார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், துணைத்தலைவர் போஸ், செயலாளர்கள் ஞானவேல்ராஜா, டி.சிவா, இயக்குனர் சங்கத்தலைவர் விக்ரமன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

முன்னதாக 'என்னமோ நடக்குது' படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் சார்பில் சமீபத்தில் பாராட்டுக்களை குவித்த இளம் இயக்குனர்களான 'சூது கவ்வும்' படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி, 'ராஜா ராணி' படத்தின் இயக்குனர் அட்லி, 'மூடர் கூடம்' படத்தின் இயக்குனர் நவீன், 'எதிர் நீச்சல்' படத்தின் இயக்குனர் செந்தில், 'விடியும் முன்' படத்தின் இயக்குனர் பாலாஜி கே. குமார் ஆகியோருக்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலுமகேந்திரா இருவரும் நினைவு கேடயம் கொடுத்து கௌரவித்தனர்.

ஆடியோவை வெளியிட்டு பேசிய பாரதிராஜா, ‘'தமிழ் சினிமா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக வளர்ந்து இருக்கிறது. திறமை மிக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலர் வருகின்றனர். 'மூடர் கூடம்' படம் பார்த்துட்டு நவீன் இந்தப் பையானான்னு ஆச்சரியப்பட்டேன். டிஃப்ரென்ட் அப்ரோச் நல்லாயிருந்தது. படித்த இளைஞர்கள்... வித்தியாசமான, சத்தமில்லாத மிகப்பிரமாணடமான படைப்பு. அடுத்து 'சூது கவ்வும்' இயக்குனர்நலன் குமாரசாமியோட டேக்கிங்ஸ் நல்லாயிருக்கு. அவரோட வே ஆஃப் டெல்லிங்ஸ் பிரம்மாதம். சின்னப் பயன் அட்லீ ! 'ராஜா ராணி' பார்த்துட்டு அசந்துட்டேன். சின்ன மண்டைக்குள்ள எவ்வளவு டெக்னிக்ஸ் வச்சிருக்கான் ஹேட்ஸ் ஆஃப். 'எதிர் நீச்சல்' இயக்குனர் செந்தில் சூப்பர். அற்புதமான படைப்பாளிகளா உருவாகிட்டிருக்கங்க. ரொம்ப பெருமையா இருக்கு.

'என்னமோ நடக்குது' படத்தோட ஹீரோ விஜய் வசந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் 'நாடோடிகள்' படத்திலே நடிச்ச விதம் ரொம்ப்ப் பிடிக்கும். அதோட அவன் என்னோட கலரா இருக்கான்! நானும் கருப்பு அவனும் கருப்பு. கருப்பு. கலர் தமிழனோட அடையாளம். படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி இசையமைக்கிறது சந்தோஷம். அவனோட நாடி நரம்பெல்லாம் இசை தான். பெரிய இசைக்குடும்பம். பாட்டு கேட்டேன் நல்லாயிருக்கு. சரண்யா பொன்வண்ணன் ஆடியிருக்காங்க, ரொம்ப நல்லாயிருக்கு. அம்மா கேரக்டரில் நடிக்கிற ஒவ்வொரு படமும் சிறப்பாயிருக்கு. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்'.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, ‘‘இரண்டு பாடல்களும் டிரைலரும் பார்க்கிறபோது சீக்கிரம் படத்தை பார்க்கணும்னு தூண்டுது. ஹீரோ, ஹீரோயின் ஆடுகிற பாட்டுல அம்மாவையும் ஆட வச்சிருக்காங்க. சரண்யா மேடம் நல்லா ஆடி, பாடியிருக்காங்க. படம் நிச்சயமா வெற்றி பெறும்’’ என்றார்.

பிரேம்ஜி பேசும்போது, '‘என்னமோ நடக்குது' படத்துக்கு முன்னாடி நிறைய படம் பண்ணுனேன். அதெல்லாம் சின்ன பட்ஜெட் படம். இது பெரிய பட்ஜெட் படம். ரொம்ப நல்லாயிருக்கு. இந்தப் படத்தோட ஆடியோ சி.டியில என்னோட ஃபோட்டோ எல்லாம் போட்டிருக்காங்க. இந்த ஃபோட்டோவை பார்த்துட்டு பெரியப்பா இளையாராஜா என்னிடம், ' என்னாடா என்னை கிண்டல் பண்றியா?' ன்னார். இல்ல பெரியப்பான்னேன் ' போஸ்டர்ல எல்லாம் என்னை மாதிரியே வெள்ளை கலர்ல டிரெஸ் போட்டுகிட்டு உருத்திராட்சம் போட்டுகிட்டு போஸ் கொடுத்திருக்கே, வேற யார் இந்த மாதிரி இருக்கா?னார்". இல்ல பெரியப்பா அது உங்களை மாதிரி மியூசிக் போட சொன்னாங்க. நான் உங்களை மாதிரி மியூசிக் போட முடியாது. வேணும்னா அவரை மாதிரி டிரெஸ் போட்டுக்கிறேன்’’ என்றேன். பிரேம்ஜி இப்படி பேசினதும் விழா அரங்கில் சிரிப்பலைகள் அடங்க நேரமானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;