சூப்பர் ஸ்டாரின் உருக்கமான பேச்சு!

சூப்பர் ஸ்டாரின் உருக்கமான பேச்சு!

செய்திகள் 16-Dec-2013 12:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல என்.டி.டி.வி.நிறுவனம் வருடந்தோறும் இந்தியாவில் வாழ்ந்துவரும் சிறந்த 25 பிரபலங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பிரபலங்களில் முதல் இடைத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிடித்திருக்க, இந்தப் பட்டியலில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஷாருக்கான், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுலகர் முதலானோரும் இடம் பிடித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரஜினிகாந்த் உட்பட அனைவருக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார். அப்போது விருது பெற்றுக்கொண்டு ரஜினிகாந்த் பேசும்போது,

“நிறைய பேர் அதிசயம் நடக்கும் என்பதை நம்ப மாட்டார்கள். ஆனால் அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன! சாதாரண ஒரு பஸ் கண்டக்டராக இருந்த எனக்கு இவ்வளவு பெரிய விருதும், கௌரவமும் கிடைத்திருக்கிறது என்றால் அது அதிசயம் தான்! சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த எனக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து என்னை வளர்த்து ஆளாக்கிய என் அண்ணன் சத்யநாராயணாவுக்கும், எனது குருநாதர் பாலசந்தருக்கும், அன்பால் என்னை இந்த உயரத்திற்கு கொண்டுவந்த தமிழக மக்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிகிறேன்” என்று அவர் உணர்ச்சிவசப்பட்ட பேச, அரங்கத்தில் பலத்த கைத்தட்டல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி


;