இளையராஜாவின் அதிரடி முடிவு!

இளையராஜாவின் அதிரடி முடிவு!

செய்திகள் 16-Dec-2013 12:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ஒரு ஊர்ல' படத்திற்கு இசை அமைத்திருக்கும் இளையராஜா, அதன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது,

‘‘ஒரு ஊர்ல படத்தை முழுவதும் பார்த்த பிறகுதான் இசையமைத்தேன். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்ததால் என்னால் நிறைவாக இசையமைக்க முடிந்தது. எந்தப் படத்திற்கும் நான் மூன்று நாட்களுக்கு மேல் இசையமைத்தது இல்லை. நூர் நாள் படமானாலும், வெள்ளி விழா படமானாலும் மூன்று நாட்களுக்கு மேல் என் ஸ்டுடியோவில் அந்தப் படம் இருந்ததில்லை. நான் அந்த காலத்திலிருந்தே நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு எனது பெயர் பயன்பெற்று இருக்கிறது. ஒரு சிலர் என்னிடம் வந்து ஏன் அவர்களுக்கு எல்லாம் ஏன் இசை அமைக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்க்கு நான் இசையமைத்து நீ வந்தது மாதிரி அவன் வந்து விட்டு போகட்டுமே. உன்னக்கு உண்டான இடம் உனக்கு, அவனுக்கு உண்டான இடம் அவனுக்கு என்பேன். புதியவர்களுக்கு என்றுமே நான் இசையமைக்க மறுத்ததில்லை. புதியவர்களே வாருங்கள், நான் இருக்கேன்’’ என்று இளையராஜா பேசினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மருது - டிரைலர்


;