டப்பிங்கில் புது முயற்சி!

டப்பிங்கில் புது முயற்சி!

செய்திகள் 16-Dec-2013 11:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'விக்னேஷ் புரொடக்ஷன்ஸ்' என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் 'ஒரு ஊர்ல'. இந்தப் படத்தில் ‘பருத்திவீரன்’ வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘பருத்திவீரன்’ படத்தில் ப்ரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர்.

கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர்.மற்றும் இந்திரஜித்,அன்னபூரணி, ‘நான்கடவுள்’ முரளி, சுந்தர், சிவா, ஜப்பான் கண்ணன், முல்லை நடலரசு தண்டபாணி,மாதவி,வனஜோதி,பேபி சௌந்தர்யா என புதுமுக நடிகர்களுடன் கதாப்பாதிரங்களுக்கேற்ப ஏராளமான கிராம மக்களும் நடிகர் நடிகைகளாக நடிதிருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் அருள்வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கே.எஸ்.வசந்தகுமார் படம் குறித்து கூறும்போது,

‘‘இந்தப் படத்தின் கதைன்னு சொன்னா யதார்த்தமான கிராமத்து கதாபாத்திரங்களை கொண்டு செதுக்கப் பட்ட உணர்வு பூர்வமான கதை ! இந்த கதாபாத்திரங்களுக்கு முழு உயிர் கொடுத்திருப்பது இளையராஜாவின் இசை. படத்தில் நடித்திருக்கும் நாற்பது கதாபாத்திரங்களில் ஒருவர் கூட விடாமல் அனைவரையுமே சொந்தக் குரலில் டப்பிங் பேச வைத்திருக்கிறோம். கிராமத்து கதாபாத்திரங்களாக உலா வந்த சின்ன சின்ன நடிகர்களை கூட சென்னைக்கு வரவழைத்து கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் மூன்றரை வயது பேபி சௌதர்யா எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாளோ அதை விட சிறப்பாக டப்பிங் பேசி அசத்தி விட்டாள். நடித்தது எப்படியோ அப்படியே டப்பிங் பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி விட்டது. இத்தனைக்கும் அவள் நடித்து முடித்து ஆறு மாதங்கள் கழித்துதான் டப்பிங் வைத்தோம். அவ்வளவு ஞாபகசக்தி அவளுக்கு. கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் வெங்கடேஷ், வில்லன் முரளி மோதும் வக்கிரமான சண்டைக் காட்சி பரபரப்பாக பேசப் படும்’’ என்கிறார் இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;