பிரிந்து வாழ முடிவெடுத்த காதல் ஜோடி!

பிரிந்து வாழ முடிவெடுத்த காதல் ஜோடி!

செய்திகள் 14-Dec-2013 11:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் பிரபல ஸ்டார் ரித்திக் ரோஷன்! பிரபல நடிகரும், தயரிப்பாளரும், இயக்குனருமான ராகேஷ் ரோஷனின் மகனான இவர் பாலிவுட்டின் இன்னொரு பிரபல நடிகரான சஞ்சய் கானின் மகள் சூசன்னேயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்களுக்கும் மேலாக ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியரின் தனிப்பட வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இபோது இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருக்கிறார்கள்.

13 வருடங்கள் இனிய இல்லற வாழ்க்கை நடத்திய இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இவர்களது பிரிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சூசன்னேயின் தந்தை சஞ்சய் கான், ‘‘மற்ற சில தம்பதிகளைப்போல ரித்திக் – சூசன்னே தம்பதிக்கு இடையிலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது! அவர்கள் இருவரும் நன்கு படித்தவர்கள். இப்போது ஏற்பட்ட பிரச்சனைகளால் இருவரும் சிறிது காலம் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளனர். இதை முடிவு என்று கருதுவது தவறு! அவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரியவில்லை’’ என்று கூறியிருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;