விஜய், மோகன்லால் மோதல்!

 விஜய், மோகன்லால் மோதல்!

செய்திகள் 13-Dec-2013 11:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'சூப்பர்குட் ஃபிலிம்ஸ்' ஆர்.பி.சௌத்திரி வழங்க, விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்தப் படத்தில் மோகன்லால் சிறப்பானதொரு தோற்றத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மகத், சூரி, தம்பி ராமய்யா, பூர்ணிமா பாக்யராஜ், நிவேதா, சம்பத், சரண், ஆர்.கே., ரவிமரியா, பிரதீப் ராவத், பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஹைதராபாத்தில் நூறு ஏக்கர் சோளக்காட்டை பேசி வாங்கினார் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி . அதில் கொஞ்சம் பகுதியை சமன் செய்து அதில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப் பட்டது. அந்த அரங்கில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து வில்லன்களுடன் பயங்கரமாக மோதும் சண்டைக் காட்சி ஒன்றை பத்து நாட்கள் படமாக்கப் பட்டது. இந்த சண்டை காட்சியில் 40 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர். இதற்காக அமைக்கப்பட்ட அரங்குக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த சண்டைக் காட்சியை 6 நவீன கேமரா யுக்தியுடன் படமாக்கி இருக்கிறார்கள். அந்த நூறு ஏக்கர் சோளக் காட்டையும் ஹெலிகேம் என்கிற நவீன கேமரா மூலம் படமாக்கி இருப்பது திரையில் பார்க்கும் போது பிரமிக்க வைக்கும். இந்தப் படத்திற்கு கணேஷ் ராஜவேல் ஒளிப்பதிவு செய்திருக்க, டி. இமான் இசை அமைத்திருக்கிறார். பாடல்களை வைரமுத்து, விவேகா, யுகபாரதி, பார்வதி எழுதியிருக்கிறார்கள். கலை அமைப்பை ராஜீவன் கவனிக்க, நடனங்களை ராஜுசுந்தரம், ஸ்ரீதர் அமைத்துள்ளனர். ஸ்டன்ட் காட்சிகளை சில்வா அமைத்துள்ளார். நேசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தலைவன் வருகின்றான் - விஷால் அந்தம் மேக்கிங் வீடியோ


;