ரீ-என்ட்ரி ஆகிறார் உலக அழகி!

ரீ-என்ட்ரி ஆகிறார் உலக அழகி!

செய்திகள் 13-Dec-2013 11:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹிந்திப் படம் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வர இருக்கிறேன். அந்தப் படம் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்று கூறியிருக்கிறார் முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன்!

சமீபத்தில் கேரளாவுக்கு வந்திருந்த ஐஸ்வர்யா ராய் கொச்சியில் புதிதாக துவங்கியுள்ள ‘லாகினெஸ்’ ஆடம்பர கைகடிகார ஷோரூமை திறந்து வைத்து பேசும்போது தான் ரசிகர்களிடையே இந்தத் தகவலை தெரிவித்தார்.

மேலும் அங்கு கூடியிருந்தவர்களுக்கு தனது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்ட பிறகு தான் அங்கிருந்து கிளம்பினார் உலக அழகி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவநாகம் - டீசர்


;