அஜித்தின் புதிய கெட்-அப்!

அஜித்தின் புதிய கெட்-அப்!

செய்திகள் 13-Dec-2013 10:17 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இமேஜைப் பற்றி கவலைப்படாதவர் அஜித்! சமீப காலமாக நரைத்த தலைமுடி, தாடியுடன் படங்களில் தோன்றி நடித்தவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு சிறிதும் குறையவில்லை என்பதோடு, பெரும்பாலான ரசிகர்கள் ’தல’யின் புதிய கெட்-அப்பை வரவேற்று ரசித்தார்கள் என்பதே உண்மை! இந்நிலையில் அஜித் இப்போது ஒரு புதிய கெட்-அப்பில், அதாவது மொட்டை தலையுடன் காட்சி தருகிறார்! இந்த மொட்டை தலை கெட்-அப் எந்தப் படத்திற்கானது என்று யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்!

அவர், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடித்து வந்த ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்ததையொட்டி அஜித்தும், இயக்குனர் சிவாவும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு தங்களது முடியை காணிக்கையாக்கி வந்திருக்கிறார்கள்! ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர் அஜித் என்றாலும், வெளிப்படையாக இப்படி திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து மொட்டை அடித்து வந்திருப்பது இதுதான் முதல் முறை!

ஆக, ‘தல’ எதை செய்தாலும் அது ஒரு ஸ்டைல்தான், அது ஒரு செய்திதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;