கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குனர் மகன்!

 கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குனர் மகன்!

செய்திகள் 12-Dec-2013 12:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல வெற்றி படங்களை இயக்கிய வி.சேகர் தனது ‘திருவள்ளுவர் கலைக்கூடம்’ பட நிறுவனம் சார்பாக தயாரித்து, இயக்கும் படம் ‘சரவணப்பொய்கை’. இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் வி.சேகரின் மகனான காரல்மார்க்ஸ். இவர் பி.இ., எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். கதாநாயகியாக அருந்ததி நடிக்கிறார். நகைச்சுவை கதாநாயகர்களாக விவேக், கருணாஸ் நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி, வடிவுக்கரசி, ஏ.வெங்கடேஷ், கிரேன் மனோகர், விஜய் சிரஞ்சீவி, செல்முருகன், சஹானா ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குகிறார் வி.சேகர் கூறும்போது,

‘‘இது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதை. தியேட்டர் சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. எம்.எஸ்.பாஸ்கரின் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் கதாநாயகன் சரவணனுக்கும் தியேட்டர் அதிபரின் மகள் அருந்ததிக்கும் இடையில் ஏற்படும் காதல், அதனை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் தான் படத்தின் கதைக் களம். தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராக கருணாஸ் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் விவேக் நடிகராகவே நடிக்கிறார். கலகலப்புக்கு பஞ்சமில்லாத படமாக உருவாகி வருகிறது ‘சரவணப்பொய்கை’’ என்றார்.வி.சேகர் இயக்கும் 18 வது படமான ‘சரவணப்பொய்கை’ படத்திற்கு டி. விஜய் இசை அமைக்க, ராஜு மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் - டீசர்


;