ஆறு சக்கர குதிரை!

ஆறு சக்கர குதிரை!

செய்திகள் 12-Dec-2013 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'எஸ் அன்ட் எஸ் ட்ரீம் மேக்கர்ஸ் ஸ்டுடியோ' என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஆறு சக்கர குதிரை’. இந்தப் படத்தில் ஜெய்சத்யா என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அபினிதா நடிக்கிறார். வில்லனாக ராஜ் முரளி நடிக்கிறார். இவர்களுடன் வணக்கம் ராஜா, ஓகே.ஜிகே, மௌஸ் ரவி, சக்தி, ஆதீஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் செந்தில் சுவாமிநாதன் படம் குறித்து கூறும்போது,

‘‘தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மக்களின் போக்குவரத்து அவசியத்தை காசாக்க நினைக்கும் சிலர் அனுமதி இல்லாத பஸ்களை இயக்கி லாபம் பார்க்கும் கதை இது. இப்படி ஒரு பஸ்ஸில் பயணிக்கும் பல்வேறு தரப்பு மக்களின் கதாபாத்திர படைப்பு தான் ‘ஆறு சக்கர குதிரை’. இதில் காதல், ஆக்ஷன் எல்லாம் இருக்கு. ஜெய்சத்யா கண்டக்டர் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு சாய் நந்தா ஒளிப்பதிவு செய்ய, ஜூன் ஹீரே இசை அமைக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;