தங்கம் கடத்தலில் பிரபல நடிகை?

தங்கம் கடத்தலில் பிரபல நடிகை?

செய்திகள் 11-Dec-2013 10:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விமான நிலையம் வழியாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல மலையாள நடிகை மைதிலிக்கு சுங்கத்துறை அதிகாரிகள நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் ஒரு சில நாட்களுக்கு முன் 20 கிலோ தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக குவைத்தில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டன்ர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கக் கடத்தலில் கோழிக்கோட்டை சேர்ந்த பயாஸ் எனபவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவரை கைது செய்து நடத்திய விசாரணையில் தனக்கும், தென்னிந்திய அழகி ஸ்ரவ்யா சுதாகருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக ஸ்ரவ்யா சுதாகரை அழைத்து விசாரித்தபோது தனக்கும் பயாசுக்கும் தொடர்பு இருப்பதை அவரும் ஒப்புக்கொண்டார். பயாசை, தனக்கு நடிகை மைதிலி தான் அறிமுகம் செய்து வைத்தார் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். இதனால் தங்கம் கடத்தல் தொடர்பாக மைதிலியை நேரில் விசாரிக்க அவருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரொம்ப நல்லவன்டா நீ டிரைலர்


;