ஆந்திராவுக்கு திரும்பும் சன்னி புயல்!

ஆந்திராவுக்கு திரும்பும் சன்னி புயல்!

செய்திகள் 10-Dec-2013 4:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டில் கலக்கிய சன்னி லியோன் தற்போது டோலிவுட்டிலும் கால் பதித்திருக்கிறார். தெலுங்கில் குத்துப் பாட்டு ஒன்றுக்கு ஆட்டம் போட்டிருக்கும் சன்னி லியோன் அது குறித்து கூறும்போது, ‘பெரிய பட்ஜெட் படம் என்பதால் இந்தப் படத்தில் ஒப்புக் கொண்டதாகவும், படத்தை பற்றிய வேறு செய்திகளை வெளியிட விரும்பவில்லை’ என்று தெரிவித்ததோடு, தனக்கு நிறைய படங்கள் குவிந்த வண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஹைதராபாத்தில் ‘ஜாக்பாட்’ ஹிந்திப் படத்தின் புரொமோஷனில் இருக்கும் சன்னி லியோன் ஹைதராபாத் பிரியாணி பற்றி கேள்விப்பட்டிருப்பதாகவும், அதை சுவைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அவருடன் ‘ஜாக்பாட்’ படத்தில் நடித்த சச்சின் ஜோஷியும் உடன் இருந்தார். சன்னி லியோன், தமிழில் ’வடகறி’ படத்தில் நடிகர் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த செய்திதானே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சார்மிங் சார்மி


;