விஜய் சேதுபதியின் அடுத்த பீட்சா!

விஜய் சேதுபதியின் அடுத்த பீட்சா!

செய்திகள் 10-Dec-2013 3:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, அடுத்து நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் படம் ‘மெல்லிசை’. கதைகளை திறமையாக தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் விஜய், இயக்குநர் ரஞ்சித் கூறிய த்ரில்லர் கதை பிடித்துப் போகவே இதில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். ‘பீட்சா’ போன்று த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்த காயத்ரி, ‘ரம்மி’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்கள் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் ‘புறம்போக்கு’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘வன்மம்’, ‘வசந்த குமாரன்’ போன்ற படங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி, இப்போது ‘மெல்லிசை’ படத்திலும் தனி கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சிட்டி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில் நடந்து வருவதாக தகவல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;