’ஜில்லா’வில் இன்னொரு பிரம்மாண்டம்!

’ஜில்லா’வில் இன்னொரு பிரம்மாண்டம்!

செய்திகள் 10-Dec-2013 1:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்யின் ‘ஜில்லா’ படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மேலும் ஒரு தகவலாக விஜய் மற்றும் மோகன்லால் சமந்தப்பட்ட ஆரம்ப பாடல் காட்சியை மிக பிரம்மாண்டமாக இயக்கி இருப்பதாக இயக்குனர் நேசன் கூறியிருக்ககிறார்.

‘சிவனும் சத்தியும் சேர்ந்தா மாசுடா எதுத்து நின்னவன் தூசு டா...‘ என்று ஆரம்பமாகும் இந்தப் பாடலை எஸ்.பி.பி. மற்றும் சங்கர் மகாதேவன் இணைந்து பாட, ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்கிறார். இந்தப் பாடலுக்காக திருமூர்த்தி டேமின் கரையோரத்தில் மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு, அங்கு படமாக்கியுள்ளனர். இந்தப் பாடல் காட்சியில் தமிழ்நாட்டு மற்றும் கேரளத்தின் அத்தனை வாத்திய கலைஞர்களையும் வரவழைத்து, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோரை நடனம் ஆட வைத்து எடுக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசையில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட பாடல் காட்சி திரையரங்கை அதிர வைக்கும் என்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;