வருகிறார் டிஜிட்டல் எம்.ஜி.ஆர்.!

வருகிறார் டிஜிட்டல் எம்.ஜி.ஆர்.!

செய்திகள் 10-Dec-2013 10:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் சினிமா துறையும் பல சாதனைகளை படைத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக பழைய படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பதில் மீண்டும் திரைக்கு கொண்டு வருவது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது, ஏற்கனவே ‘கர்ணன்’, ‘வசந்த மாளிகை’ போன்ற படங்கள் டிஜிட்டல் பரிமாணத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக 1965-ல் எம்.ஜி.ஆர். நடித்து வசூல் சாதனை படைத்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாராக உள்ளது. இது குறித்து ‘திவ்யா ஃபிலிம்ஸ்’ உரிமையாளர் சொக்கலிங்கம் பேசும்போது, படத்தை 35 எம்.எம் வடிவத்தில் இருந்து டிஜிட்டல் முறையில் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்துடன், இப்படத்தை 5.1 ‘டிடிஎஸ்’ முறையில் வெளியிடவும் இருக்கிறேன் என்று தெரிவித்தார். ஜனவரி இறுதியில் திரைக்கு வரும் இப்படத்தின் ட்ரெய்லர் பொங்கல் பண்டிகை அன்று வெளியிட இருப்பதாக தகவல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;