விஜயகாந்த் வீட்டிலிருந்து அடுத்த அதிரடி!

விஜயகாந்த் வீட்டிலிருந்து அடுத்த அதிரடி!

செய்திகள் 9-Dec-2013 3:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமாவில் மற்றுமொரு வாரிசு நடிகர் ஹீரோவாக அறிமுகமாகிறார்! நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனும் சினிமாவுக்கு வருகிறார் என்றும், அதற்காக நிறைய கதைகள் கேட்டு வருகிறார்கள் என்றும் சமீபகாலமாக பேசப்பட்டு வந்தது. இப்போது அது உறுதியாகி விட்டது! விஜயகாந்தின், ‘கேப்டன் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் மூலம் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் கதையை நவீன் எழுதியிருக்க, அறிமுக இயக்குனர் சந்தோஷ் குமார் ராஜன் இயக்குகிறார். வேலுமணி வசனம் எழுத, பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் துவக்கவிழா வருகிற 12- ஆம் தேதி சாலிகிராமத்திலுள்ள ஆண்டாள் அழகர் இல்லத்தில் நடைபெறவுள்ளது. சண்முக பாண்டியனுடன் நடிக்கும் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சகாப்தம் - டிரைலர்


;