ரயிலில் ரொமான்ஸ்!

ரயிலில் ரொமான்ஸ்!

செய்திகள் 9-Dec-2013 1:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'என்.சி.ஆர் மூவி கிரியேஷன்ஸ்' என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’. இந்தப் படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘சென்னையில் ஒரு நாள்’, ‘சுற்றுலா’ போன்ற படங்களில் நடித்தவர். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார். மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார்.வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார். விஜய் பெஞ்சமின் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் என்.ராஜேஷ்குமார் படம் குறித்து கூறும்போது, ‘‘இது ஒரு ரொமான்டிக் பயணக் கதை! முழுக்க முழுக்க காதல்தான் மையக் கரு. இதுவரை நிறைய படங்களில் ரயிலில் ஆக்ஷன் அல்லது பாடல் காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு முழுப் படத்தையும் ஓடும் ரயிலிலேயே படமாக்கியது இதுவே முதன் முறை !

சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லும் ரயிலில் நடக்கும் சுவையான சம்பவங்களின் தொகுப்புதான் ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’. சிதம்பர கிருஷ்ணன் என்ற கதாநாயகனின் பெயரை நண்பர்கள் செல்லமாக, ‘சிக்கி’ என்று அழைப்பதையே தலைப்பாக்கி இருக்கிறோம். சென்னையிலிருந்து மாலையில் கிளம்பும் ரயில் நாகர்கோவில் போய் சேர ஆகும் இடைவெளியான ஒரு இரவில் நடக்கும் ரொமான்டிக் கதை தான் இது. ‘நாளைய இயக்குனர் சீசன் 2’ வில் விருது வாங்கிய நான் இந்த படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறேன். இதே தலைப்பில் தான் நாளைய இயக்குனருக்காக குறும்படம் இயக்கி விருது பெற்றேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்க காட்டுல மழை - டிரைலர்


;