சிக்கலில் ஷாருக்கான்!

சிக்கலில் ஷாருக்கான்!

செய்திகள் 9-Dec-2013 11:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான் ஆகியோருக்கு மும்பை உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது! கான் தம்பதியர் சமீபத்தில் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டார்கள் இல்லையா? அந்தக் குழந்தை கருவில் இருக்கும்போது அது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தியுள்ளார்களாம்! இந்திய சட்டப்படி கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்பதை அறியும் பரிசோதனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறி கான் தம்பதியர் செயல்பட்டதாகக் கூறி மும்பையிலுள்ள சமூக ஆர்வலர் வர்ஷா தேஷ்பாண்டே மும்பை உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார். இது சம்பந்தமாக கான் தம்பதியருக்கும். இந்த பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படும் மருத்தவமனை அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது! வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ஷாருக்கானும், அவரது மனைவி கௌரி கானும் நீதிமன்றத்தில் ஆஜராகி இதற்கு பதில அளிக்க வேண்டுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இவன் யாரென்று தெரிகிறதா - வீடியோ


;