சிரபுஞ்சியில் பிரபு சாலமன்!

சிரபுஞ்சியில் பிரபு சாலமன்!

செய்திகள் 9-Dec-2013 10:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மைனா’, ‘கும்கி’ படங்களுக்கு முன் பிரபு சாலமன் சில படங்களை இயக்கியிருந்தாலும், விஷுவலுக்கு ‘மைனா, ‘கும்கி’ ஆகிய படங்களில் எடுத்துக்கொண்ட சிரத்தை, அவர் தனது முந்தைய படங்களில் எடுத்துக் கொண்டதில்லை! ‘மைனா’, ‘கும்கி’ படங்களுக்கு மிரட்டலான, அதே சமயம் அழகான லோகேஷன்களை தேடி கண்டு பிடித்து, படம் பிடித்து கதை சொல்லியிருந்த விதம் தமிழ் சினிமாவில் புதுசாக இருந்தது. இதேபோன்ற கடுமையான முயற்சியோடு தனது அடுத்த படமான ‘கயல்’ படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார் பிரபு சாலமன்! இந்தப் படத்திற்காக மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்குச் சென்றுள்ள பிரபு சாலமன், அங்குள்ள இயற்கையான பல லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இயற்கையாக மரங்களின் வேர்களால் உருவான பாலங்களில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியிருக்கிறார்! இந்த இயற்கை பாலம் மலை உச்சியில் இருந்து 3000 அடி கீழே உள்ளதால் மிகவும் சிரமப்பட்டு அந்த பாடல் காட்சியை படம் பிடித்தார்களாம்! இது போன்று பார்ப்பதற்கு பிரமிப்பாகவும், வியப்பாகவும், கண்களுக்கு விருந்தாகவும் இருக்கும் பல லொகேஷன்களில் ‘கயல்’ வளரந்து வருகிறது. ஆக, பிரபு சாலமனின் ‘கயல்’ படமும் ஒரு விஷுவல் ட்ரீட் படமாக அமையப் போகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;