பெண்கள் சீரியலுக்கு அடிமையா? - ரம்யா கிருஷ்ணன்

பெண்கள் சீரியலுக்கு அடிமையா? - ரம்யா கிருஷ்ணன்

கட்டுரை 9-Dec-2013 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் மாறாம அப்படியே இருக்கு..!’’ என ‘படையப்பா’ படத்தில் சூப்பர் ஸ்டாரைப் பார்த்து கேட்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த டயலாக் ரஜினிக்கு மட்டுமல்ல, சொன்னவருக்கும் அப்படியே பொருந்துகிறது. ‘வம்சம்’ சீரியலின் நாயகியுடன் ஒரு ரன்னிங் பேட்டி...

சினிமாவுல இருந்ததைவிட சின்னத்திரைக்கு வந்ததும் ரொம்ப சுறுசுறுப்பா இருக்கீங்க?

‘கலசம்’ தொடர்தான் எனக்கு சின்னத்திரைல அறிமுகம் தந்தது. ஆனாலும், தொகுப்பாளரா வொர்க் பண்ண ‘தங்கவேட்டை’ நிகழ்ச்சிதான் என்னை எங்கேயோ கொண்டுபோயிடுச்சு. அதுக்கடுத்து தெலுங்கு சீரியல்ல நடிச்சேன். மறுபடியும் ‘தங்கம்’ சீரியல் என்னை மக்கள்கிட்ட நெருக்கமாக்கிடுச்சு. இப்போ ‘வம்சம்’ல சக்தியா நடிச்சுக்கிட்டிருக்கேன். ‘படையப்பா’ நீலாம்பரியா பார்த்தவங்கதான், இப்போ ‘சக்தி’யையும் ரசிக்கிறாங்க. ஸோ... சினிமாவோ, சீரியலோ மக்கள் ரசிக்கிறமாதிரி நடிச்சா, நம்மள ஏன் தூக்கி எறியப் போறாங்க?

‘கலசம்’, ‘தங்கம்’, ‘வம்சம்’னு உங்க சீரியல் எல்லாமே நாலெழுத்துல இருக்கே? எதுவும் சென்டிமென்ட்டா?

ஒவ்வொரு சீரியலுக்கும் நூறு தலைப்பை பரிசீலனை பண்றோம்... ஏன்னா, ஆடியன்ஸுக்கு சீரியலோட தலைப்பு புடிச்சிருந்தாதான், சீரியல் ரீச் ஆகும். ‘தங்கம்’ விரும்பாத பெண்களும் இல்ல, ‘வம்சம்’ விருத்தியாகணும்னு நினைக்காத குடும்பமும் இல்லை. அதான் அந்த டைட்டில்ஸ். மத்தபடி சென்டிமென்ட்டெல்லாம் கிடையாது.

சினிமா - தொலைக்காட்சி... ரெண்டுல எது ரொம்ப வசதியா இருக்கு?

சினிமான்னா ஒரு படம் முடிச்சதும் ஃப்ரீயாயிடுவோம், கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும். சீரியல் அப்படி இல்லை. அதை உருவாக்குறதுல இருந்து, அந்தக் கேரக்டராவே ரொம்பநாள் வாழ்றது கொஞ்சம் கஷ்டம்தான். தவிர, சின்னத்திரை ஆடியன்ஸுக்கு தினமும் வெரைட்டியான விறுவிறுப்பை சீரியல்ல கொடுக்கணும். இல்லைன்னா, ஸ்கிப் பண்ணிட்டு அடுத்த சேனலுக்கு போயிடுவாங்க.

பல காலமா சீரியல்களைப் பார்த்து பார்த்து பெண்கள் எல்லாரும் அதுக்கு அடிமை ஆயிடுறாங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே?

அதிக செலவில்லாமல் வீட்டிலிருந்தபடியே பொழுதுபோக்குற ஒரே விஷயம் டிவிதான். அதுவும் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கிட்டே கிடைக்கிற விஷயம். நாள் முழுக்க உழைக்கிற பெண்களுக்கு ஒரு சின்ன ரிலாக்சேஷன்தான் சீரியல்ங்கிறது என்னோட கருத்து. கணவர் கொஞ்சம் மூஞ்சி சுண்டிப் பேசிட்டாலும், நாள் முழுக்க வீட்டுல உட்கார்ந்து அழுற சம்பவங்கள் நிறைய இருக்கு. அதையெல்லாம் மாத்துறது சீரியல்தான்! அதுல இருக்கிற நல்ல விஷயங்களை எடுத்துகிட்டு, கெட்ட விஷயங்களை தூக்கிப்போட பெண்களுக்குத் தெரியும். அதனால, இதையெல்லாம் நான் கொஞ்சமும் ஏத்துக்க மாட்டேன்.

- விஜய கோபால்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;