டபுள் ட்வின்ஸ்!

டபுள் ட்வின்ஸ்!

செய்திகள் 9-Dec-2013 10:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில் புதுமையான முறையில் ஒரு படம் உருவாகி வருகிறது. படத்தின் பெயர் ‘வெண்மேகம்’. இந்தப் படத்தை சுஜாதா – சுனிதா என்ற இரட்டை சகோதரிகள் தயாரிக்க, ராம்- லக்‌ஷ்மண் என்ற இரட்டை சகோதரர்கள் இயக்குகிறார்கள். இதில் விதார்த், இஷாரா ஜோடியாக நடிக்கிறார்கள். ஜெயஸ்ரீ சிவதாஸ் என்ற சிறுமி முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். படத்தின் கதாநாயகன் விதார்த் ஒரு ஓவிய கலைஞன். அவர் மீது அன்பு செலுத்தும் சிறுமியாக ஜெயஸ்ரீ நடிக்கிறார். இவர்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டம்தான் கதையாம்! இந்தப் படத்திற்கு ஜாபர் கனி இசை அமைக்கிறார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றமே தண்டனை - டிரைலர்


;