ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி!

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி!

செய்திகள் 9-Dec-2013 10:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற 12-ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்த நாள்! ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி! ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினியை போற்றும் வகையில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. ‘பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தாரங்கே…’ என்று வரும் இந்தப் பாடலை கன்னட பட இய்க்குனர் ருஷி எழுதி இருக்கிறார்.

பிரதீப் ராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் பாடலை விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். சமீபத்தில் பெங்களூருவிலுள்ள மல்லேஸ்வரத்தில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஜினியின் ரசிகர்கள் நடனம் ஆடியுள்ளனர்.

இந்தப் பாடலில் ரஜினிகாந்தின் குணநலன், அவரது எளிமை, மனிதாபிமானம் போன்ற விஷயங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தப் படத்தில் 12 கேரக்டர்கள் உள்ளன. அதில் ஒரு கேர்கடரில் ராஜ் பகதூர் நடிக்கிறார். இவர் ரஜினியின் சிறுவயது முதலான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;