சட்டென்று மாறுது தலைப்பு!

சட்டென்று மாறுது தலைப்பு!

செய்திகள் 7-Dec-2013 5:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கவித்துவமான, அழகான தமிழ் தலைப்புகளை வைத்து படங்களை இயக்கி வருபவர் கௌதம் மேனன். இவர் தற்போது சிம்புவை வைத்து இயக்கி வரும் படத்திற்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று தலைப்பு வைத்திருந்தார். அருமையான இந்த டைட்டில் குறித்து படத்தின் நாயகன் சிம்பு கூட ஹேப்பியாக டுவீட் செய்திருந்தார்.

ஆனால் இப்போது அந்த தலைப்புக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, ‘சரவணரஜ் மூவி கம்பைன்ஸ் புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் ரவிராஜ் என்பவர் கௌதம் மேனன் வைத்துள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

தணிக்கைக் குழுவினரால் இந்தப் படத்திற்கு 'U' சர்டிஃபிக்கெட்டும் வழங்கப்பட்டிருப்பதோடு, அரசாங்கம் வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கௌதம் மேனன் இயக்கும் படத்தின் டைட்டில் சட்டென்று மாறுது! கௌதம் மேனனின் புதிய அழகிய தலைப்பு என்ன என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;