ஆண்டின் இறுதி பரபரப்பு!

ஆண்டின் இறுதி பரபரப்பு!

கட்டுரை 7-Dec-2013 2:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அந்த காலத்தில் எல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தான் அதிக படங்கள் போட்டாப் போட்டி போட்டுக் கொண்டு ஒரே நேரத்தில் வெளியாகி கொண்டிருந்தது! ஆனால் இப்போதுள்ள கால மாற்றத்தாலும், திரைப் படங்களை தயாரித்து வெளியிடுவதில் மற்றும் சினிமா வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் ஏற்பட்ட மாற்றங்களாலும் இப்போதெல்லாம் பண்டிகை காலங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. ஆனால் மற்ற நாட்களில் நிறைய படங்கள் வெளியாகும் ஒரு டிரெண்ட் உருவாகி இருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம்தான்!

மேற்குறிப்பிட்ட விஷயம் அப்படி என்றால், இப்போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், அதாவது டிசம்பர் மாதத்தில் எக்கச்சக்க படங்கள் ரிலீசுக்கு ரெடியாவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதில் பெரிய நடிகர்கள், சிறிய நடிகர்கள் நடித்த படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட்டில் உருவான படங்கள் எல்லாம் அடங்கும்! இப்படி ரிலீசுக்கு தயாராகும் படங்கள் எல்லாம் ரிலீசாகுமா என்றால் அது கேள்விக்குறியே! இதற்கு முக்கிய காரணம் மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகர்கள் நடித்த, புகழ்பெற்ற இயக்குனர்கள் இயக்கிய, செல்வாக்கு மிக்க தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்களுக்கே தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

முழுக்க முழுக்க வியாபார நோக்கத்தோடு, போடுகிற முதலீட்டை விட அதிக அளவில் லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் எல்லாரும் சினிமாவுக்கு வருகிறார்கள். அப்படியிருக்கும்போது தங்களது தயாரிப்புகள் திட்டமிட்டபடி ரிலீசாக வேண்டும், முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு எல்லாரும் செயல்படுவது வாடிக்கையான விஷயம் தான். இது மட்டுமல்லாமல் வருட இறுதிக்குள் தங்களது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன, தேசிய விருது, மாநில அரசு விருது, மாநில அரசின ஊக்கத்தொகை பெறுவதற்கான விதிமுறைகளை கடைபிடித்தல் போன்ற சில விஷயங்களுக்காகவும் படங்களை குறித்த காலத்தில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்த வரிசையில் இந்த (டிசம்பர்) மாதம் ’பிரியாணி’, இவன் வேற மாதிரி, ‘என்றென்றும் புன்னகை’ ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘மதயானைக் கூட்டம்’, ‘ரம்மி’ போன்ற பல பெரிய படங்கள் வரிசையாக வெளியாக இருக்க, இந்தப் படங்களுடன் கிட்டத்தட்ட 30 திரைப்படங்கள் ரிலீசுக்காக களத்தில் இருக்கின்றதாம்! ஆனால் இந்தப் படங்களை எல்லாம் ரிலீஸ் செய்வதற்கு போதுமான தியேட்டர்கள், கிடைக்குமா என்பது சந்தேகமே! இந்த ஆண்டின் கிளைமேக்ஸ் போட்டியில் எந்தெந்த படங்கள் ரிலீசாகும், யார் யார் வெல்லப் போகிறார்கள் என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்! அது வரை காத்திருப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;