சிரஞ்சீவி ராஜினாமா ரகசியம்?

சிரஞ்சீவி ராஜினாமா ரகசியம்?

செய்திகள் 7-Dec-2013 11:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து ஜெயித்தவர்களில் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் ஒருவர். தற்போது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணி மத்திய அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வந்த சிரஞ்சீவி, தெலங்கானா பிரச்சனையில் அதிருப்தி ஏற்பட்டு நேற்று தனது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தச் சமபவம் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இனி சிரஞ்சீவி அரசியலை தவிர்த்து, சினிமாவில் அதிக கவனம் செலுத்தப் போகிறார் என்றும், சினிமாவில் நடிப்பதற்காக நல்ல கதைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. சிரஞ்சீவி இதுவரை 149 படங்களில் நடித்திருக்கிறார். அடுத்த படம் அவரது 150-வது படம். இந்தப் படம் நல்ல ஒரு கதை அமைப்புடன், பெரிய ஒரு இயக்குனர் இயக்கத்தில், பிரம்மாண்டமான முறையில் அமைய வேண்டும் என்று விரும்புகிறாராம் சிரஞ்சீவி! இதற்காக சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தேஜா நிறைய கதைகளை கேட்டு வருகிறாராம். சமீபத்திய தகவலின் படி ராம்சரண் தேஜா, பிரம்மாண்டத்துக்கு பெயர் பெற்ற இயக்குனரான ஷங்கரை கூட சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக, ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி அடுத்து நடிக்கப் போகும் படம் யார் இயக்கத்தில், யாரது தயாரிப்பில் உருவாகப் போகிறது என்பது தான் டோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;