மீண்டும் சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணி?

மீண்டும் சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணி?

செய்திகள் 7-Dec-2013 11:13 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’மெரினா’ படத்தில் இணைந்த பாண்டிராஜ் – சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இணைந்த படம் ’கேடி பில்லா கில்லாடி ரெங்கா’. இந்தப் படங்களை தொடர்ந்து மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் ‘மான் கராத்தே’ மற்றும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி படு பிசியாக நடித்து வருகிறார். அது மாதிரி பாண்டிராஜ் சிம்பு - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படத்தின் வேலைகளில் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவுடன் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்பு கிளம்பியிருக்கிறது. இதனால் இந்தப் படத்தின் மீது அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு இயக்கி வரும் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கும் திட்டம் இப்போதைக்கு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;