கல்யாண சமையல் சாதம்

இந்தப்படம் கல்லூரி செல்லும் காளையருக்கு நிச்சயம் பிடிக்கும்!

விமர்சனம் 7-Dec-2013 11:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

முழுக்க முழுக்க பிராமண வீட்டுக் கல்யாணத்தை பின்புலமாக வைத்துக்கொண்டு பாக்யராஜ் பாணியில் கதை சொல்ல முற்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா. வில்லங்க பிரச்சினையை நகைச்சுவையோடு சொல்லியிருப்பவருக்கு திரைக்கதையில் சில தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் சமாளித்துள்ளார். ஆங்காங்கே தொய்வு, படம் நீளமாக செல்லும் உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் நிறைய இடங்களில் குபீர்சிரிப்பை வரவழைக்கிறது.

கதாபாத்திரங்களை மிகச்சரியாக தேர்வு செய்துள்ளார் இயக்குனர். பிரசன்னா, லேகா வாஷிங்டன் பொருத்தமான ஜோடி. பிரசன்னா இந்தக்கதையை தைரியமாக ஓகே செய்ததற்கு தனி பாராட்டு.

லேகா வாஷிங்டன், பிரசன்னா இருவருமே நன்றாக நடித்துள்ளனர். அவர்களுடன் நடித்த பெரும்பாலோனோர் நாடகங்களில் நடித்த நடிகர்களான நீலு, டெல்லி கனேஷ், உமா பத்மாநாபன், ராகவ், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, Dr.ஷர்மிளா ஆகியோர்.

லேகாவை பெண் பார்க்கும் பிரசன்னா ஒகே சொன்னவுடன் வீட்டில் கல்யாணத்திற்கான வேலைகள் தடபுடலாக ஆரம்பிக்கிறது. நிச்சயிக்கப்பட்ட பெண் லேகாவுடன் வெளியில் சுற்றிவிட்டு வீடு திரும்பும் பிரசன்னாவுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப்பிரச்சனையில் இருந்து வெளிவர அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. என்ன பிரச்சனை? கல்யாணம் நடந்ததா இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்திற்கு வசனம் பெரிய உதவியாக உள்ளது. அதிலும் ஆங்கில வசனங்களை எழுதிய அந்த நபர் பயங்கரமான குசும்பு பிடிச்ச மனிதர். பாக்யராஜ் பாணியில் வசனங்கள். தமிழ்ல இருக்க வில்லங்கமான வசனங்களைக்கூட ஆங்கிலத்தில் எளிதாக சொல்லிவிட முடிகிறது. கிரேசி மோகன் பிரசன்னாவுடன் பேசும் அந்த ஒரு காட்சியே இதற்கு சாட்சி.

பெண் உட்கார்ந்துட்டாவிலிருந்து, பெண் பார்ப்பது, திருமணம் நிச்சயிப்பது, மற்ற சடங்குகள் உட்பட அனைத்தும் பிராமண வீட்டில் நடப்பவைகளை அப்படியே கண் முன் காட்டியுள்ளார்கள். அதிலும் புரோகிதம் பண்ணும் ஹைடெக் ஸ்கைப் வாத்தியார் அமர்க்களம்.

காஸ்ட்யூமர், ஆர்ட் டைரக்டர், கேமிராமேன், மியூஸிக் அனைவரையும் பாராட்டலாம். ஹரிஷ் ராகவேந்திரா எழுதியிருக்கும் 'காதல் மறந்தாயடா' பாடலை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

இந்தப்படம் கல்லூரி செல்லும் காளையருக்கு நிச்சயம் பிடிக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;