இரண்டு விதமான ’கெட்-அப்’களில் மீனாட்சி!

இரண்டு விதமான ’கெட்-அப்’களில் மீனாட்சி!

செய்திகள் 7-Dec-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கருப்பசாமி குத்தகை தாரர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீனாட்சி. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த மீனாட்சி கடைசியாக நடித்த படம் கரு.பழனியப்பன் இயக்கி, நடித்த ‘மந்திரப்புன்னகை’. இந்தப் படத்திற்குப் பிறகு சொந்த ஊரான கொல்க்கத்தாவுக்குச் சென்ற மீனாட்சி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். ரா.நா.சரவணன் இயக்கி, தயாரிக்கும் ‘வில்லங்கம்’ படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் மீனாட்சி. இப்படத்தின் துவக்க விழா நேற்று ஏவிஎம்.ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இந்தப் படத்தின் முன் பாதியில் உடல் இளைத்த மாதிரியான தோற்றத்தோடும், பிற்பாதியில் 10 கிலோ எடை கூடியவாறும் வருவது மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் மீனாட்சி! இந்தப் படத்தின் ஃபோட்டோ ஷூட் மற்றும் துவக்க விழாவுக்காக சென்னை வந்த மீனாட்சி, படத்தின் பிற்பாதியில் வரும் கேரக்டருக்கு பொருத்தமான உடல் எடையோடு இருப்பதால் முதலில் படத்தின் பிற்பாதியை எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ரா.நா.சரவணன். பிற்பாதி எடுத்து முடித்தப் பிறகு மீனாட்சி 10 கிலோ எடையை குறைத்த பிறகு முதல் பாதியின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆங்கில படம் - டிரைலர்


;