ஈகோ – விமர்சனம்

ஆள் மாறாட்டத்தை நகைச்சுவை ததும்ப சொல்ல முயற்சி செய்கிறார் இயக்குனர்!

விமர்சனம் 6-Dec-2013 5:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வடிவேலு, சந்தானம் போன்ற காமெடி நடிகர்கள் மீது ஹீரோக்கள் சவாரி செய்து வந்த காலம் போய் தற்போது புதுமுக காமெடியன்கள் மீது கூட நாயகன் சவாரி செய்வது வழக்கமாகி விட்டது. அப்படி வந்துள்ள படம் தான் 'ஈகோ'. 'கந்தக்கோட்டை' படத்தில் கோட்டை விட்ட சக்திவேல், விட்டதை பிடிக்கும் முயற்சியில் இறங்கி அடித்திருக்கும் படம் தான் இது.

வழக்கமான பழைய ஃபார்முலா கதையை தான் எடுத்து தூசுகூட தட்டாமல் அப்படியே உல்டாவாக்கி எடுத்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல். ஹீரோ, ஹீரோயின் இருவரும் ரயிலில் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே முட்டல், மோதலில் ஆரம்பிக்கிறது கதை. தன் தங்கை குழந்தையின் காதுகுத்துக்கு பணம் கொண்டு செல்லும் ஹீரோ அந்த பணத்தை ரயிலில் தவற விட, தன் அம்மாவின் மோதிரத்தை கொண்டுவருபவன் தான் காதலன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, தன் காதலனை கைப்பிடிக்க வீட்டை விட்டு ஓடி வரும் ஹீரோயினும் மோதிரத்தை தொலைத்து விட, அந்த மோதிரம் நாயகன் கையில் சிக்க, அந்த மோதிரத்தால் ஏற்படும் விளைவுகளே கதை.

அந்த மோதிரத்தால் ஏற்படும் ஆள் மாறாட்டத்தை நகைச்சுவை ததும்ப சொல்ல முயற்சி செய்கிறார் இயக்குனர். ‘கலகலப்பு’ படத்துக்கு வசனம் எழுதிய கேபிள் சங்கர் தான் இந்த படத்துக்கும் வசனம் எழுதியிருக்கிறார். ஆனால் சில இடங்களை தவிர நிறைய இடங்களில் போர் தான்.

படத்தின் நாயகனாக வேலு, நாயகியாக அனஸ்வரா அறிமுகம். நாயகன் படம் முழுக்க காமெடியனோடு சேர்ந்தே பயணிக்கிறார். தனித்திறமையை வெளிப்படுத்த தவறுகிறார். நாயகி அனஸ்வரா முதல் பாதி முழுக்க ஆப்சென்ட். இரண்டவது பாதியில் மட்டுமே என்ட்ரி ஆகிறார்.

நாயகனின் நண்பனாக பாலசரவணன், ஒரே ஆறுதல். படத்தை தாங்க முயற்சி செய்தும் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அது வீணாகிறது. நல்ல எதிர்காலம் இருக்கிறது பாலாவுக்கு.நாயகியின் அப்பா, அண்ணன்கள், அவர்கள் குடும்பம் என அனைவரையும் லூசாக காட்டி இருக்கிறார் இயக்குனர். படத்தில் ஒரே ஆறுதல் பாடல்கள் இல்லாதது. தங்கைக்கு பணம் கொடுக்க செல்லும் அண்ணன், அதை விட்டுவிட்டு கடைசியில் நாயகியை காதலித்து கரம் பிடித்து, முதலிரவில் படத்தை முடிக்கிறார் இயக்குனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;