கௌதம் - சிம்பு படத்தலைப்பு?

கௌதம் - சிம்பு படத்தலைப்பு?

செய்திகள் 6-Dec-2013 5:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தான் இயக்கும் படங்களுக்கு அருமையான தமிழ் பெயர்களை வைப்பதில் கெட்டிக்காரர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்! ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணை தாண்டி வருவாயா’ என கவித்துவமான தலைப்புகளை வைத்து படம் எடுத்த கௌதம் வாசுதேவ் மேனன், அடுத்து சிம்புவை வைத்து இயக்கி வரும் படத்திற்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று அழகான ஒரு தமிழ் பெயரை சூட்டி மீண்டும் தனக்கு தமிழ் மொழி மீதிருக்கும் பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த தலைப்பு குறித்து டுவீட் செய்திருக்கிற படத்தின் ஹீரோ சிம்பு, ‘‘என்னோட படத்திற்கு மற்றுமொரு நல்ல தலைப்பு கிடைத்திருக்கிறது, நன்றி கௌதம் வாசுதேவ் மேனன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;