அஞ்சலிக்கு நோ, நித்யாவுக்கு எஸ்!

அஞ்சலிக்கு நோ, நித்யாவுக்கு எஸ்!

செய்திகள் 6-Dec-2013 5:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘முனி’, ‘காஞ்சனா’ படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி படம் ‘முனி 3 கங்கா’. இந்தப் படத்தில் கதையின் நாயகியாக டாப்சி நடித்து வருகிறார். கதையின் ஃப்ளாஷ்பேக்கில் வரும் நாயகியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அவர் இப்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இதனால், ‘முனி 3 கங்கா’ படத்தில் அஞ்சலிக்கு பதிலாக நித்யா மேனனை ஒப்பந்தம் செய்திருக்கிறார். நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் மார்க்கெட் உள்ள நடிகை என்பதால் அவரை தேர்வு செய்துள்ளார்களாம். இப்போது நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை போரூரில் உள்ள டி.ஆர்.கார்டனில் எடுத்து வருகிறர் ராகவா லாரன்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாநகரம் -1 நிமிட ட்ரைலர்


;