கமல்ஹாசன், ஆமீர்கான் இணையும் விழா!

கமல்ஹாசன், ஆமீர்கான் இணையும் விழா!

செய்திகள் 6-Dec-2013 4:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 12-ஆம் தேதி தொடங்கி, 19-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் 58 நாடுகளில் இருந்து 165 திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகி இருக்கிறது. இதில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்களும் அடங்கும். இந்தப் படங்கள் சென்னையிலுள்ள ஐநாக்ஸ், அபிராமி, உட்லாண்ட்ஸ், கேசினோ, ராணி சீதை ஹால் ஆகிய இடங்களில் திரையிடப்படவிருக்கிறது.

தமிழ் படங்களுக்கான போட்டியில் ‘மரியான்’, ‘மூடர்கூடம்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’, ‘பரதேசி’, ‘பொன்மாலை பொழுது’, ‘சூது கவ்வும்’, ‘தங்கமீன்கள்’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘6 மெழுகு வர்த்திகள்’, ‘அன்னக்கொடி’, ‘ஹரிதாஸ்’, ‘கும்கி’ என 12 படங்கள் கலந்து கொள்கிறது. விருதுக்கான தமிழ் படங்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், நடுவர் குழு உறுப்பினர்களாக நடிகை ஸ்ரீப்ரியா,எழுத்தாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் வருகிற 12-ஆம் தேதி துவங்கவுள்ள இந்த விழாவை நடிகர்கள் கமல்ஹாசன், ஆமீர்கான் துவக்கி வைக்கிறார்கள். தொடக்க விழாவின்போதும், நிறைவு நிகழ்ச்சியன்றும் திரையுலக கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;