சந்தானத்துடன் ‘ஜித்தன்’ ரமேஷ்?

சந்தானத்துடன் ‘ஜித்தன்’ ரமேஷ்?

செய்திகள் 6-Dec-2013 3:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் ரமேஷ். இவர் நடித்த முதல் தமிழ் படம் ’ஜித்தன்’. வின்சென்ட் செல்வா இயக்கிய இப்படத்தின் வெற்றியை தொடர்ந்துதான் ரமேஷை, ‘ஜித்தன்’ ரமேஷ் என்று அழைக்கப்பட துவங்கினார்கள்! இந்தப் படத்திற்கு பிறகு ‘மதுரை வீரன்’, ‘புலி வருது’, ‘பிள்ளையார் தெரு கடைசி வீடு’ போன்ற பல படங்களில் நடித்த, ரமேஷுக்கு அப்படங்கள் சொல்லும் படியாக வெற்றிப் படங்களாக அமையவில்லை!

இப்போது, ‘ஜித்தன்’ ரமேஷ் தான் முதன் முதலாக நடித்த ‘ஜித்தன்’ படத்தின் இயக்குனர் வின்சென்ட் செல்வாவுடன் இணைந்து ’ஜித்தன்’ படத்தின் தொடர்ச்சியாக ஒரு கதையை உருவாக்கி அதில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிப்பதற்காக நடிகர் சந்தானத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் ரமேஷும், வின்சென்ட் செல்வாவும் சந்தானம் நடிக்க ஒப்புக்கொண்டதும் படத்தின் மற்ற வேலைகளில் முழு மூச்சாக இறங்க போகிறார்களாம். ஆக, ‘ஜித்தன் 2’ உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடம்பன் - டீசர்


;