மீண்டும் இணைந்த அண்ணன் தம்பி!

மீண்டும் இணைந்த அண்ணன் தம்பி!

செய்திகள் 6-Dec-2013 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏற்கெனவே நாம் வெளியிட்டிருந்த செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் ‘ஜெயம்’ ரவி. ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்து முடித்த கையோடு, அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்க ரெடியாகி விட்டார் ‘ஜெயம்’ ரவி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ரவியுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார் நயன்தாரா. இவர்களுடன் சத்யன், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோரும் நடிக்க, இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ‘ஜெயம’ ரவியும் அவரது அண்ணன் ‘ஜெயம்’ ராஜாவும் இணைந்த எல்லா படங்களும் ஹிட் என்பதாலும் ’ஜெயம்’ ரவியுடன் முதன் முதலாக நயன்தாரா இணைந்து நடிக்கிறார் என்பதாலும் இப்போதே இந்தப் படம் மீது ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘நிமிர்ந்து நில்’ படம் தவிர ’பூலோகம்’ என்ற படத்திலும் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;