கபிலேஷ்வரின் 'இசைப்பயணம்' கனடாவில் கோலாகல விழா!

கபிலேஷ்வரின் 'இசைப்பயணம்' கனடாவில் கோலாகல  விழா!

செய்திகள் 5-Dec-2013 5:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கிள்ளாதே', 'பயபுள்ள', 'என் காதல் தேவதை' போன்ற படங்களுக்கு இசையைமத்துள்ள இசை அமைப்பாளர் கபிலேஷ்வர். இவரது இசையில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா போன்ற உலகத்தின் பல நாடுகளின் பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக் கலைஞர்கள் பங்கேற்று உருவாக்கியுள்ள இசை ஆல்பம் ‘இசைப்பயணம்’ கனடா நாட்டில் வரும் 14-ஆம் தேதி வெளியாகிறது.

இந்த ஆல்பத்தில் இந்தியாவிலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், முகேஷ், சுஜாதா, சின்மயி, பின்னி கிருஷ்ணகுமார், மதுமிதா, முருகன் மந்திரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கனடா நாட்டில், டொரண்டோவில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க இந்த விழா நடக்க உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;