உறுதியாகி விட்டது வெங்கட் பிரபு – சூர்யா கூட்டணி!

உறுதியாகி விட்டது வெங்கட் பிரபு – சூர்யா கூட்டணி!

செய்திகள் 5-Dec-2013 4:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மங்காத்தா’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம், ‘பிரியாணி’. இந்தப் படத்தில் கார்த்தியை இயக்கிய வெங்கட் பிரபு, அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை, ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கிறார். லிங்குசாமி – சூர்யா இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும். இந்தப் படம் சம்பந்தமான மற்ற தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - டிரைலர்


;