‘ஜில்லா’ சர்ப்ரைஸ் பாடல்!

 ‘ஜில்லா’ சர்ப்ரைஸ் பாடல்!

செய்திகள் 5-Dec-2013 2:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜில்லா’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், தினம் தினம் படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களும் வெளிவந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லாலும், விஜய்யும் இணைந்து பாடுவது மாதிரியான ஒரு ஓப்பனிங் சாங் வருகிறது.

இந்தப் பாடலில் விஜய்க்கு சங்கர் மகாதேவனும், மோகன்லாலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பின்னணி பாடியுள்ளார்கள். இந்தப் பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார். இந்தத் தகவலை ‘ஜில்லா’வுக்கு இசை அமைக்கும் டி.இமானே டுவீட் செய்திருக்கிறார். அனேகமாக எஸ்.பி.பி. - சங்கர் மகாதேவன் இணைந்து பாடும் முதல் பாடல் இதுவாகதான் இருக்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;