ஹாரிஸ் ஆன் தி வே…

ஹாரிஸ் ஆன் தி வே…

செய்திகள் 5-Dec-2013 11:05 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன், இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கி வரும் படம் ’யான்’. ஜீவா, துளசி நாயர் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ‘யான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்போது படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

சந்தோஷ் சிவன், பி.சி.ஸ்ரீராம், கே.வி.ஆனந்த் வரிசையில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள ரவி.கே.சந்திரன் முதன் முதலாக இயக்கி வரும் ‘யான்’ படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 15-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்தை ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜீவா, த்ரிஷா ஜோடியாக நடித்திருக்கும் ‘என்றென்றும் புன்னகை’ படம் வருகிற 20-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ‘யான்’ படமும் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;