தெலுங்கில் ஈராஸ்!

தெலுங்கில் ஈராஸ்!

செய்திகள் 4-Dec-2013 5:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபு நடித்து வரும் படம் ‘நின்னோகாடினே’. ‘14 ரீல்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில், அதிக பொருட் செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சனான் நடிக்க, சுகுமார் இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். டோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் தயாரிப்பில் இப்போது பிரபல கார்பரேட் நிறுவனமான ‘ஈராஸ்’ நிறுவனமும் கை கோர்த்துள்ளது. ஹிந்தி, தமிழ் திரைப்பட உலகில் ஏற்கெனவே பல படங்களை தயாரித்துள்ள ‘ஈராஸ்’ நிறுவனம் முதன் முதலாக தெலுங்கு படவுலகில் கால் பதித்து தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரம்மாண்ட படம் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;